NEET – PG நீட் முதுநிலை தேர்வு : ஜெய்ப்பூரில் குளறுபடியால் 2,445 தேர்வர்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு !

NEET – PG
நீட் முதுநிலை தேர்வு :
ஜெய்ப்பூரில் குளறுபடியால் 2,445 தேர்வர்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வில் குளறுபடி காரணமாக இரு தேர்வு மையங்களுக்கு மட்டும் மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் முதுநிலைத் தேர்வு நாடு முழுவதும் நேற்று 30 – 08 – 2026 சிறப்பாக நடந்து முடிந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு, நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 339 நகரங்களில் உள்ள 1,111 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 2,73,096 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,65,980 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு தேர்வு மையங்களில் மட்டும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையால், மாணவர்கள் தேர்வெழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே இரு தேர்வு மையங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இவ்விரு மையங்களுக்கு மட்டும் வருகிற செப். 5-ல் மறுதேர்வு நடத்தப்படும். இதனால், 2,445 தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.