தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா : ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்களை வழங்க இருக்கிறார்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா :
ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்களை வழங்க இருக்கிறார்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

திருவாரூர் மாவட்டத்நில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த பல்கலைகழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.