தூத்துக்குடி K.S.மாரியப்பன் நினைவு ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் மண்டல அளவிலான விளையாட்டு விழா – 2026 – மண்டலம் 5B – நடைபெற்றது !

தூத்துக்குடி K.S.மாரியப்பன் நினைவு ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் மண்டல அளவிலான விளையாட்டு விழா – 2026 – மண்டலம் 5B – நடைபெற்றது !

தென்கிழக்கு இந்திய யூனியன், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட், கல்வித்துறை சார்பாக மண்டலம் 5B-க்கான மண்டல அளவிலான விளையாட்டு விழா 30.08.2026 அன்று தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள K.S. மாரியப்பன் நினைவு ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவை மண்டல அலுவலர் எட்வின் சாமுவேல் தலைமை தாங்கி நடத்தினார். மண்டலம் 5B-க்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கோ-கோ, கைப்பந்து (Volleyball), எறிபந்து (Throwball), நீளம் தாண்டுதல், 100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ தொடர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக போதகர். ரத்ன சிங் தலைவர், தென் தமிழ் மாநாடு, SDA, போதகர். ஜெபஸ்டின் செயலாளர், தென் தமிழ் மாநாடு, SDA , போதகர். ராதாகிருஷ்ணன் பதிப்புத்துறை இயக்குனர், போதகர். ஐசக் பாக்கியநாதன் சபை போதகர், சக்கரவர்த்தி KSPS குழும நிறுவனங்கள், பிரபு KSPS குழும நிறுவனங்கள்,மனோஜ் KSPS குழும நிறுவனங்கள்.ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி, உடல் ஆரோக்கியமும் ஆன்மீக ஒழுக்கமும் இரண்டும் அவசியம் என்று அறிவுரை வழங்கினர்.

விழா காலை 09:00 மணிக்கு ஜெபத்துடனும், அணிவகுப்பு மரியாதையுடனும் தொடங்கியது.

இவ்விழா நடைபெற ஒத்துழைத்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.