தூத்துக்குடி கடற்கரை தூய்மைப் பணியில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து 20.09.2025 அன்று தூத்துக்குடி இனிகோ நகர், கடற்கரை சுத்தம் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி காலை 6.00 மணிக்கு தொடங்கியது. சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் கடல்சார் உயிரியல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவிகள் கடற்கரையை சுத்தப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி செயலாளர் அருட் சகோதரி டாக்டர். குழந்தை தெரசா, முதல்வர் அருட் சகோதரி.டாக்டர்.ஜெஸி பெர்னாண்டோ, துணைமுதல்வர் அருட் சகோதரி டாக்டர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் செரீனா மார்கரெட் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த டாக்டர் ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.













