நான்கு பாடத்தில் 100/100, கட் ஆப் 200 – சிவகாசி மாணவர் மறு கூட்டல் மறு மதிப்பீட்டில் சாதனை : மாணவனின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி!
சிவகாசி ஸ்ரீ செண்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய சஞ்சய் கிருஷ்ணா என்ற மாணவன் மறு கூட்டல் மறு மதிப்பீட்டில் கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 8 ம் தேதி வெளியானது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை சிவகாசி ஸ்ரீ செண்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய் கிருஷ்ணா எழுதினார். அதனுடைய முடிவுகள் எட்டாம் தேதி வெளிவந்தது மாணவன்
தமிழ் -95 ஆங்கிலம் – 97 இயற்பியல் – 100 வேதியலில் – 100 கணினிஅறிவியல் – 100 கணிதம் – 98
என மொத்தம் 590/600 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
மாணவன் தான் கணிதம் பாடத்திலும் தேர்வினை நன்றாக எழுதி இருந்ததாகவும், தனக்கு 100 மதிப்பெண்கள் கிடைக்கும் ஆனால் 98 மதிப்பெண் கிடைத்தது தனக்கு கவலை அளிப்பதாக நினைத்தார்.
எனவே கடந்த தேர்வு முடிவுக்கு பின் நடந்த மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஜூன் மன 23ஆம் தேதி மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளிவந்தன. அதில் மாணவன் சஞ்சய் கிருஷ்ணா கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.தற்போது மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்குப் பின் மொத்தம் 592/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது சஞ்சய் கிருஷ்ணாவின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
சஞ்சய் கிருஷ்ணா சொல்லும்போது தான் இந்த பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் இயற்பியல், வேதியல், கணினி அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருந்தேன். கணிதத்தில் மட்டும் 98 மதிப்பெண்கள் பெற்று இருந்தேன். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நான் கணிதத்தில் 100 மதிப்பெண் வாங்குவேன் என்று நம்பிக்கையாக இருந்தேன். எனவே நான் மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.
அதில் இன்று வெளியான முடிவில் நான் கணிதத்தில் எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்தது. எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மேலும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் மாணவர் சஞ்சய் கிருஷ்ணா.
என்றால் இது குறித்து சஞ்சய் கிருஷ்ணாவின் தாயார் நமது “கல்விச்செய்திகள் டாட் காம்” க்கு அளித்த பேட்டியில் சஞ்சய் கிருஷ்ணா ஸ்ரீ செண்பக விநாயகா மெட்ரிக் மேல் பள்ளி சிவகாசியில் படித்து வந்தார். வகுப்பில் மிகவும் தேர்ந்த மாணவனாகவும் எப்பொழுதும் நன்றாக படிக்கும் மாணவனாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்ணுக்கு 478 மதிப்பெண் எடுத்திருந்தார் தற்பொழுது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 600க்கு 592 மதிப்பெண் வாங்கியுள்ளார். கட் ஆப் மார்க் 200 வைத்துள்ளார்.
மேலும் சஞ்சய் கிருஷ்ணா ECE எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் படிப்பதற்காக அப்ளை செய்துள்ளார். அவருக்கு நிச்சயமாக அண்ணா யுனிவர்சிட்டியில் படிப்பதற்கான இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
சஞ்சய் கிருஷ்ணாவின் தந்தை பாலமுருகன் எம். ஏ,பி.எட், முடித்துள்ளார். தாயார் மகாலட்சுமி அவரும் எம்.ஏ, பி.எட் முடித்துள்ளனர். சஞ்சய் கிருஷ்ணா – க்கு சஞ்சனா என்ற ஒரு தங்கை உள்ளார் அவரும் இதே ஸ்ரீ செண்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகாசியில் படித்து வருகிறார்.
சஞ்சய் கிருஷ்ணாவின் தந்தை மற்றும் தாயார் இருவரும் இடைநிலை ஆசிரியர்கள் ஆவார்கள். தந்தை விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தாயார் சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை திருத்திய ஆசிரியர்கள் கணிதத்தில் எப்படி இவ்வளவு கவன குறைவாக இருந்தார்கள் என்பதை சிறிது யோசிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. மாணவன் இந்த 100 மதிப்பெண்ணை முதல் மதிப்பீட்டில் பெற்று இருந்தால் அவருடைய நிலை எங்கோ சென்றிருக்கும். மாநிலம் முழுவதும் பாராட்டப்பட்டிருப்பார். எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக என்ன படிக்க வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்து இருப்பார்.
இந்த சூழ்நிலையில் அவர் நிதானமாக மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்து இருந்து நம்பிக்கையுடன் வெற்றி பெற்றது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
வெற்றி பெற்றிருக்கும் மாணவனை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். இந்த தருணத்தில் கல்வி அதிகாரிகளும், அரசாங்கமும் சஞ்சய் கிருஷ்ணாவின் வெற்றியை கொண்டாடி அவருக்கு கல்விக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது கல்விச் செய்திகள் டாட் காம் இன் கோரிக்கையாக உள்ளது.
சஞ்சய் கிருஷ்ணாவின் பேட்டி 👇👇👇












