தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு நடைபெற்றது!

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு நடைபெற்றது!

தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, ஏ.பி.சி.யின் முன்னாள் மாணவியர் சங்கம் உடன் இணைந்து முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 29.08.2026 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு, கல்லூரியின் டாக்டர் வி. வசந்திதேவி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் கல்லூரியின் முன்னாள் மாணவியரை ஒருங்கிணைத்து, அவர்களது கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பழைய நட்புகளைப் புதுப்பிக்கவும், முன்னாள் மாணவியரிடையேயான அன்பையும் நட்பையும் மீண்டும் மலரச் செய்வதுடன், அவர்களுக்கும் கல்லூரிக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமா, கலந்து கொண்டார். இவர் 2002–2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஆவார். தற்போது தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பி.டி. உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

முன்னாள் மாணவியர் தங்களது கல்லூரி நாட்களின் இனிய நினைவுகள், கல்விப் பயணம், பணியனுபவங்கள் மற்றும் வாழ்க்கையில் பெற்ற சாதனைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். மேலும், முன்னாள் மாணவியருக்கு தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுத்து, நிகழ்காலத்தைப் பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்திற்கு புதிய உத்வேகத்துடன் பயணிக்க இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சி இனிய நினைவுகளையும், பயனுள்ள அனுபவப் பகிர்வுகளையும், புதிய உறவுகளையும் ஏற்படுத்தி மனநிறைவாக முன்னாள் மாணவியர் சந்திப்பு – நிகழ்ச்சி நிறைவுற்றது.