தூத்துக்குடி முள்ளக்காடு கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு !

தூத்துக்குடி முள்ளக்காடு கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு !

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திடம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் 15.08.2026 சனிக்கிழமை, சுதந்திர தினத்தன்று அன்று முள்ளக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் உளவியல் துறை  இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மணு வழங்கியதோடு, கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அங்கன்வாடி குழந்தைகள் சுதந்திர தின விழாவை சிறப்பித்ததோடு, குழந்தைகளுக்கு உடல் நலன் பற்றிய விழிப்புணர் மாணவர்களால் வழங்கப்படாது. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஷிபானா, செயலர் முனைவர். அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர்.அருட்சகோதரி எழிலரசி, இயக்குநர் முனைவர்.அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான்(UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

உளவியல் துறைத் தலைவர் முனைவர்.ஜெய பாரதி, பேராசிரியர் ஆரோக்கிய காட்சியா ஆகியோர் வழி நடத்தினர்.