நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அளவிலான மகளிர் கபாடி போட்டி : தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி சாம்பியன்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அளவிலான மகளிர் கபாடி போட்டி :
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி சாம்பியன்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் கபாடி போட்டி செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில்
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் SAV கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில்
27அணிகள் கலந்து கொண்டது.

இறுதிப்போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி அணியும் வடக்கன்குளம் SAVகல்லூரி அணியும் மோதினர்.

இதில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி 42 வெற்றி புள்ளிகளையும் வடக்கன்குளம் SAV கல்லூரி அணி 32 வெற்றி புள்ளிகளையும் பெற்றனர்.
10 புள்ளிகள் வித்யாசத்தில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

முதலிடம் பெற்ற
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி வீராங்கனைகளுக்கு
SAV கல்வி குழுமத்தின் தாளாளர் திவாகரன் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

வெற்றி பெற்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ராஜா ஆகியோரை
கல்லூரி முதல்வர் துணை முதல்வர் மற்றும் செயலாளர் பாராட்டினார்கள்.