சென்னை IITM Pravartak நிறுவனத்துடன் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை IITM Pravartak நிறுவனத்துடன் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி இவ்வாண்டு 75 வது ஆண்டு பவழ ( Platinum Jubilee ) விழாவை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், திறன் மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு SEJE(Skill Enhancement for job Employebility) திட்டத்திற்காக, பேங்கிங், நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் (BFSI) மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் சென்னை IITM Pravartak ( இந்திய தொழில் நுட்பக் கழகம் மெட்ராஸ் )நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பயிற்சி ஜூலை 1- ம் தேதி கல்லூரியில் தொடங்க உள்ளது. இந்த பயிற்சி திட்டத்திற்கான Nodal Agencyயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சியில் மாணவர்கள் அனைவருடைய
ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் மேலும் இந்த பயிற்சியில் ஈடுபடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு தெரிவித்தார்.