UGC NET 2025 தேர்வு விண்ணப்பம் ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய
மே 14 மற்றும் 15 வரை கால அவகாசம்
தேசிய தேர்வு முகமையினால் 85 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வான இத்தேர்வு நடத்தப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்தில் இத்தேர்வு நடைபெறும்.
இந்நிலையில் ஜூன் 2025 (UGC NET June 2025) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 7 தேதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் மே 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய மே 14 மற்றும் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
யுஜிசி- நெட் தேர்வு வரும் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் https://ugcnet.nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் திருத்தம் செய்து கொள்ளலாம்.












