கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் இந்திய அறிவு மரபு மையம் இணைந்து உலக யோகா தின விழாவை 21.06.2026 இன்று கல்லூரியில் நடத்தின.
ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.மதிவண்ணன் தலைமை தாங்கினார். முனைவர்.சுப்புராயலு, துறைத் தலைவர், உயிர்வேதியியல் துறை வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்திய அறிவு மரபு (IKS) முதன்மைப் பயிற்சியாளரான முனைவர்.இசக்கிமுத்து சர்வதேச யோகா தின சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், இந்தியாவின் பாரம்பரிய அறிவு முறையான IKS-இன் முதன்மைக் கொடையே யோகா என்றும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு திருமூலர் போன்ற சித்தர்கள் காட்டிய யோக நெறிகளை மாணவர்கள் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியரும், யோகாவில் முதுகலைப் பட்டம் பெற்றவருமான முனைவர். பரமேஸ்வரி கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மனநல மேம்பாடு, ஆரோக்கியமான முதுமை குறித்து உரையாற்றி, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யோகப் பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர். இசக்கிமுத்து நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132, இந்திய அறிவு மரபு மையம் (IKS Cell), பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.












