இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 25) வெளியிட்டார்.

இதில் அரசு ஒதுக்கீடு மருத்துவ இடங்களில் சூர்ய நாராயணன் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் திருமூர்த்தி என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவப் படிப்புகள்

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதார்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

11 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள்

தமிழ்நாட்டில் மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 5200 இடங்கள் உள்ளன. அவை தவிர சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள சுமார் 4,000 எம்.பி.பி.எஸ்டி இடங்கள் என மொத்தம் 9,200 இடங்கள் வரை உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 250 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்கள் என 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் என மொத்தம் 11,300 அதிகமான இடங்கள் உள்ளன.

கலந்தாய்வு :

தற்போது தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 30 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாணவன் முதலிடம் :

நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 655 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 653 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஹிருதிக் விஜயராஜா 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4 ஆவது இடம், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5 ஆவது இடம்; விருதுநகர் மாணவர் நிதின் பாபு 6 ஆவது இடம், சென்னை மாணவர் கைலேஷ் கிரண் 7 ஆவது இடம், சென்னை மாணவர் நிதின் கார்த்திக் 8 ஆவது இடம், தருமபுரி மாணவர் பிரகதீஷ் சந்திரசேகர் 9 ஆவது இடம், தேனியைச் சேர்ந்த மாணவி பொன் ஷரினி 10 ஆவது இடம் பிடித்துள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் அளித்த 25 பேர் தரவரிசைப் பட்டியலிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

govt quota mbbs 2025

management merit_2025

mbbs_7_5_merit_2025