2025 மருத்துவ படிப்புக்கான ரேங்க் லிஸ்ட்டை ஜூலை 22 ல் வெளியிட வேண்டும் தமிழக அரசின் உயர் கல்வித்துறைக்கு கோரிக்கை : குழப்பத்தில் மாணவர்கள்
இது குறித்து கல்வியாளர் கல்விச் செய்திகள் டாட் காம் மூலமாக உயர் கல்வித் துறைக்கு வைத்துள்ள கோரிக்கை பின் வருமாறு 👇
TNEA – 2025 தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கி 18 ம் தேதி முடிவடைந்துள்ளது.
இதில் கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 179 வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதில் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்து நிலையில் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதை அவர்கள் உறுதிப்படுத்த 18ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய மாணவர்களுக்கு ஒதுக்கிட்டு ஆணை வழங்கப்பட்டது.இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23ஆம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்துக்கு சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து கல்விக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 23ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று சேர்க்கை நடைமுறைகளையும் முடித்து விட வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்திருந்தார்.
மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் கல்லூரியில் சேராவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் ரத்து செய்யப்பட்டு அடுத்த நிலையில் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 25ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான ரேங்க் லிஸ்ட் வெளியாக இருக்கிறது மேலும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பிவிஎஸ்சி மற்றும் ஏ ஹெச் ரேங்க் லிஸ்ட் வரும் 26 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த மூன்று படிப்புகளுக்குமான கலந்தாய்வுகள் ஒரே நேரத்தில் இருப்பதினால் மாணவர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளன
கட் ஆப் மதிப்பெண் அதிகமாக வைத்துள்ள மாணவர்கள் இந்த மூன்று படிப்புகளுக்கும் அதாவது மருத்துவம்,பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவம் படிப்புகளுக்காக விண்ணப்பித்து அவர்கள் படிப்பில் சேர தயாராக உள்ள நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முதல் சுற்று முடிந்து விட்டது. இதில் கலந்து கொண்டு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய மாணவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் பொறியியல் கல்லூரியில் அசல் சான்றிதழை சமர்ப்பித்து கல்வி கட்டணத்தையும் செலுத்தி சேர்க்கையை முடித்து விட வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவுறுத்தியுள்ள நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாக வைத்துள்ள மாணவர்கள் தான் பொறியியல் சேர்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு உறுதியானதால் அவர்கள் 23ஆம் தேதிக்குள் தங்களது கல்லூரியில் கல்வி கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விடுவர்.
அதன் அதன்பிறகு 25ஆம் தேதி வர இருக்கும் மருத்துவ படிப்பிற்கான ரேங்க் லிஸ்டில் தாங்கள் இடம்பெற்று இருந்தால் அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இடத்தை விட்டு விட்டு மருத்துவ படிப்பில் சேர முடிவெடுப்பார்கள். இந்நிலையில் அவர்கள் பொறியியல் கல்லூரியில் தாங்கள் செலுத்திய கட்டணத்தையும் தங்களது கல்வி சான்றிதழையும் திரும்ப பெற முயற்சிப்பார்கள். ஆனால் கல்லூரியில் செலுத்திய கட்டணத்தைத்தை திரும்பத் தர மாட்டார்கள். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவர்களுடைய இடங்கள் காலியாகவே இருக்கும்.ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அந்த இடத்தை மற்றவர்களுக்கு விற்று விடுவர். இதே போல் கால்நடை மருத்துவ படிப்பிற்கன கவுன்சிலிங் வரும் 26 ஆம் தேதி வெளி வர இருக்கிறது.இதற்கும் அதிக மதிப்பெண் பெற்ற அதே மாணவர்கள்தான் விண்ணப்பம் செய்திருப்பர்.அவர்களுக்கு அந்த கவுன்சிலிங் முடிவில் தங்களுடைய லிஸ்ட் வரும் நிலையில் அவர்களும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இடத்தை விட்டுவிட்டு தங்களுக்கு கிடைத்திருக்கும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர முடிவு எடுப்பர்.எனவே பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இடத்திற்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் இது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், பொருளாதார பிரச்சனையையும் உருவாக்கும்.இது அவர்களுடைய பெற்றோர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கான ரேங்க் லிஸ்ட்டை மூன்று நாட்களுக்கு ( ஜீலை – 22 ) முன்பே வெளியிட வேண்டும். அப்படி இல்லாத சூழ்நிலையில் பொறியியல் படிப்பிற்கான கல்லூரியில் சேர்க்கை தேதியை 5 நாட்கள் ( ஜுலை – 28 ) தள்ளி வைக்க வேண்டும். இதனால் மாணவர்கள் தங்களது படிப்பின் சேர்க்கை பற்றி ஒரு தெளிவாக முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.
கல்வியாளர் முனைவர். ஜாகிர் உசேனின் விளக்கம் கீழே வீடியோவில் காணத் தவறாதீர்கள் 👇👇












