வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் உடற்கல்வித்துறை, NCC. மற்றும் NSS Units இணைந்து 11வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ஒன்றை இன்று ( 23 – 06 – 2025 ) காலை 9.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு உள்ளரங்கத்தில் நடத்தியது.

NSS,NCC மற்றும் விளையாட்டுத்துறை மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் மற்றும் பிராணாயாமம் போன்ற யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

யோகா பயிற்சியாளர்கள் சுந்தரவேல் மற்றும் யோகலட்சுமி நேரடி பயிற்சிகளை வழங்கி, யோகாவின் பயன்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் சிவஞானம் வரவேற்புரை ஆற்றி, சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

NCC அதிகாரியான லெப்டினெண்ட் முனைவர் நிஷாந்த் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரிகள் முனைவர் செல்வம், முனைவர் கிருஷ்ணன் மற்றும் முனைவர் ஆரோக்கிய செல்வ சுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.