தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை : ஜீன் 2 ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை
ஜீன் 2 ம் தேதி பள்ளிகள் திறப்பு

ஏப்ரல் 25ஆம் தேதி பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. அந்த சூழலில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ம் தேதி பள்ளி திறக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு செய்திகள் பள்ளி திறப்பில் தேதிகள் மாற்றத்துடன் வெளிவந்தன.

போட்டோ நன்றி ஏசியா நெட் நியூஸ் தமிழ்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற சூழ்நிலையில் இந்த செய்திகள் வெளிவந்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கோடை மழை வெயிலின் தாக்கத்தை குறைத்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேலும் சில மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது இதனால் வெயிலின் தாக்கம் குறைந்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்பட கூறியுள்ளார்.அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜூன் 2 ம் தேதி மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் திறக்கப்படும்.

பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம் வழங்கப்பட இருக்கிறது. பள்ளி திறப்பின் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பள்ளி திறக்கும் தேதியை வலியுறுத்தி வகுப்பறைகளை சுத்தமாகவும், மாணவர்களை வரவேற்க தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு பள்ளி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளி மீண்டும் திறப்பதற்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

போட்டோ நன்றி ஒன்இண்டியா தமிழ்

மாணவர்களுக்கு வேண்டுகோள் :

மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்கு உதவ வேண்டும்,கரும்பலைகளை தயாரித்தல் மற்றும் பள்ளி புதிய தொடக்கத்திற்கான பொருட்களை சேகரித்தல் போன்றவற்றில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு வகுப்புகள்:

நெறிமுறை வகுப்புகள் இப்போது வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும். போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முயற்சிகளை 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒவ்வொருவரும் செவ்வாய்க்கிழமை தோறும் பேச்சுகள், கவிதைகள்,துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.

உணவு & பத்திரிக்கை

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நல்ல தரத்துடன் உடனடியாக வழங்கப்பட உள்ளது மதிய உணவுக்குப் பிறகு மாணவர்களுக்கு பத்திரிகை படிக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

கலைஞர் பிறந்தநாள்

பள்ளிகள் திறந்த மறுநாள் ஜீன் 3, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் என்பதனால் சர்க்கரை ( இனிப்பு ) பொங்கல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.