இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 2025 முடிவுகள் எப்போது?

                                              இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 2025 முடிவுகள் எப்போது?

போட்டோ நன்றி Careerindia Tamil

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வை மாணவ-மாணவியர்கள் என மொத்தம் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர்.

நீட் தேர்வு கடினம்

நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் இந்தாண்டு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர். வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகள் ஒரு அளவிற்கு எளிமையாக இருந்ததாகவும், இயற்பியல் பகுதி மிக கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

போட்டோ நன்றி நியூஸ் 18

நீட் தேர்வு முடிவுகள் எப்போது?

நீட் தேர்வு முடிவடைந்த நிலையில், அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதனைத்தொடந்து, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேசிய தேர்வு முகமையின் உத்தேசப்படி,  நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.