தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி தேசிய கடற்படை மாணவர்கள் ஸ்வச் பாரத் அபியான் நிகழ்ச்சியில் பங்கேற்பு
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியைச் சேர்ந்த தேசிய கடற்படை மாணவர் பிரிவின் 50 மாணவர்கள் ஜனவரி 7 ம் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற ஸ்வச் பாரத் அபியான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் பொது இடங்களில் தூய்மையைப் பேணுவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் மாணவர்கள் பூங்காவை சுத்தம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி 3 TN தேசிய கடற்படை மாணவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.












