தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சாரணர், சாரணியர் பிரிவுகளுக்கான சிந்தனை நாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சாரண, சாரணிய பிரிவினர்களுக்கான சிந்தனைநாள் விழா கொண்டாட்டம் மற்றும் போட்டிகள் மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் வைத்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளிகளுக்கிடையே சாரண, சாரணிய இயக்கம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் குறும்படம் தயாரித்தல், கிராமிய குழு நடனம், ஓவியம் வரைதல், உபயோகமற்ற பொருட்களை வைத்து புதுமையான பொருட்கள் செய்தல், ரங்கோலி, சமையல், காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு பொருட்கள் செய்தல், கலர் பார்ட்டி, கூடாரம் அமைத்தல் போன்ற ஒன்பது வகையான சிறப்பு போட்டிகள் சாரணர் மற்றும் சாரணியர்களுக்கு தனிப்பிரிவாக நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 15 பள்ளிகளிலிருந்து 252 சாரணர்கள், 240 சாரணியர்கள் மற்றும் 30 சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிந்தனை நாள் விழாவில் நடைப்பெற்ற போட்டிகளில் பல பள்ளிகள் சிறப்பாக பங்கு பெற்று பரிசுகள் பெற்றனர்.
சாரணர் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும,; இரண்டாம் இடத்தை புதுக்கோட்டை டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியும் பிடித்தது .
சாரணியர் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் பெற்றனர்.

தொழிலதிபர் விவிலியன், பிஷப் கால்டுவெல் கல்லூரி முதல்வர் ஜெயா ஆகியோர் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளையும் பாராட்டி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
தேசியப் பயிற்சியாளர்கள் ஐடா LT(G), கிறிஸ்டி ஹேம்லட் விஜி ALT(G), கார்த்திக் ALT(S), ராஜகோபால் ALT(S),கிருஷ்ணன் ALT(S), ஆகியோர் கலந்து கொண்டு சாரண, சாரணியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

சாரண, சாரணிய இயக்க நிறுவனர் பேடன் பவுல் பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் பல்வேறு பள்ளிகளிலிருந்து பெறப்பட்டு பல ஆசிரமங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.எட்வர்ட் ஜான்சன்பால், துணைச் செயலாளர் திருமதி. சகாய மேரி வீனஸ், மாவட்ட ஆணையர் திரு.சரவணன், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் திருமதி.ஜெயாசண்முகம், திரு.கார்த்திக், திரு.ஜான் சௌந்திரராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.












