தஞ்சை மாவட்டத்திற்கு 27.04.2026 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :

தஞ்சை மாவட்டத்திற்கு 27.04.2026 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை :
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :

தஞ்சாவூர் மாவட்டத்தில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு வரும் 27.04.2026 (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 09.05.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்து மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், ஆணையிடப்படும் கல்வி நிறுவனங்களும் இயங்கும்.

மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைக் கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 27.04.2026 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கிட ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.