ழமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !
தொடர் மழை காரணமாக இன்று அக்டோபர் 21 புதன்கிழமை சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை அதிகரித்த நிலையில் மேலும் 5 வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.இதனை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளனர்.
மேலும் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதனால் இன்னும் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற ஆவல் மாணவர்களை காட்டிலும் பெற்றோர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.












