தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில்  BSFI பயிற்சித் திட்டம் :

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில்  BSFI பயிற்சித் திட்டம் :

BSFI ( Banking financial services & Insurance ) வங்கி நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பற்றிய பயிற்சித் திட்டம் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, IITM பர்வர்தக் நிறுவனத்துடன் இணைந்து, TMB அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்ட பயிற்சி 01.07.2025 முதல் 09.07.2025 வரை நடை பெற்றது.

Infact Pro Trainers நிறுவனத்திலிருந்து பாலாஜி மற்றும் ஆண்டனி ஆகியோர், வங்கித் துறை, நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இரண்டாம் கட்ட வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெறும்.

இப் பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூய மரியன்னை கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவூ வாஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 151 மாணவர்கள் பங்கேற்றனர்.