தூத்துக்குடியில் நவம்பர் 15 ல் மாவட்ட கலைப் போட்டி :
மாணவ – மாணவியர்கள் கலந்து கொள்ள அழைப்பு
கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக 15.11.25 சனிக்கிழமை தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை மாவட்ட கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது.

5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற நடனம், ஓவியம் போன்ற கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ் பெறலாம்.
மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ மாணவியர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு .
அதன் பிறகு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை பரிசாக வழங்கப்படும். வரும்போது ஆதார் ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். தனிநபர் போட்டி. குழு போட்டி கிடையாது. பங்குபெறும் மாணவர்கள் இருந்து சான்றிதழ் பெற்று செல்லலாம்.
தொடர்புக்கு – 9487739296
தலைமை ஆசிரியை,
மாவட்ட அரசு இசைப்பள்ளி,
தூத்துக்குடி.












