சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 விரைவில் வெளியீடு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில், பெரும்பாலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, ஏறத்தாழ 10.2 லட்சம் மாணவர்கள் மற்றும் 8.3 லட்சம் மாணவிகள் உட்பட, சுமார் 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் நெருங்கி வருவதால், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். பலர் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளையும் தொழில் பாதைகளையும் ஏற்கனவே இறுதி செய்துவிட்ட நிலையில், மற்றவர்களோ கல்லூரி சேர்க்கை, நுழைவுத் தேர்வுகள் மற்றும் பாடப்பிரிவுத் தேர்வு போன்ற வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வு இரண்டாம் கட்டத்தின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) உள்ளிட்ட இளங்கலை நுழைவுத் தேர்வுகளுக்கும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.












