மாநில அளவிலான கலைப் போட்டி :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு சாம்பியன் கோப்பை
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி சுழற்கோப்பையை வென்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி 9.1.2026 அன்று நடத்திய இன்விக்டா’26 (INVICTA ’26) மாநில அளவிலான கலைப் போட்டிகளில் வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவ, மாணவியர் வெற்றிப் பெற்று ஒட்டுமொத்த சுழற் கோப்பையை வென்றுள்ளனர்.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஜாக்சன் மற்றும் இளைஞர் நலத்துறை பேராசிரியர்களை பாராட்டினார்.













