மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

கடந்த 2 ஆண்டுகளாக கல்விக்கான நிதி வரவில்லை; மறைமுக அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம், கொள்கையில் என்றும் சமரசமில்லை.

தமிழ்நாட்டிற்கு கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் கல்வி நிதி வந்து சேரவில்லை என குறிப்பிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இருமொழிக் கொள்கையில் ஒருபோதும் சமரசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், மத்திய அரசின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்றார்.

மேலும், பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது அரசு, தனியார் என யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என எச்சரித்த அவர், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை சமரசம் செய்ய மாட்டோம் என்றார்.

ஆசிரியர்கள் பிரச்சனைகளை பேசி தீர்வு காணலாம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.