தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா.

தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா.

தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் 3 ம் ஆண்டு விழா நடந்தது. பரிசுகளை வ.உ. சிதம்பரம் கல்லுரி முதல்வர் டாக்டர். வீரபாகு வழங்கினார்.

தூத்துக்குடி மீளவிட்டான், டிலைட் பப்ளிக் பள்ளியில் 3 ம் ஆண்டு விழா மற்றும் மழலைக் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லுரி முதல்வர் டாக்டர். வீரபாகு, தலைமை‌ தாங்கினார்.

பள்ளித் தலைவர் ஜெயசீலன், பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பட்டயக் கணக்காளர் கோகுலன் ராஜன், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியில் பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி வரவேற்புரை ஆற்றி பள்ளியின் ஆண்டறிக்கையை வழங்கினார்.
நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், கே.ஜி குழந்தைகளுக்கு பட்டங்களையும், சான்றிதழ்களையும், திறம்பட செயல்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பரிசுகளையும் வ.உ. சிதம்பரம் கல்லுரி முதல்வர் டாக்டர். வீரபாகு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் ஆசிரியர்கள் பாடம் கற்றுகொடுக்கும் போது அதன் அறிவியல் சம்பந்தமான விளக்கங்களையும் கற்று கொடுக்க வேண்டும் அதுவே குழந்தைகளின் ஆழ்ந்த சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் என்று கூறினார்.


குழந்தைகளின் பல்வேறு சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள், 12 இளவரசிகள் என்னும் நாடகம் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களையும் கவர்ந்தது.

ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற பணியாற்றிய ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு பள்ளி முதல்வர் நன்றி கூறினார். இறுதியாக பள்ளி ஆசிரியரியை ஆந்தியா நன்றியுரை வழங்கினார்.