தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சோனியா தலைமையில் நடைபெற்றது. பகுதியின் வார்டு கவுன்சிலர் மரிய கீதா முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை தங்கமணி அனைவரையும் வரவேற்று இந்தக் கூட்டத்தின் 14 கூட்ட பொருள்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது SLAS தேர்வு மற்றும் THIRAN பற்றி கூறப்பட்டது.

எண்ணும் எழுத்தும், உயர் கல்விக்கான வழிகாட்டி, உள்ளடக்கிய கல்வி, போக்சோ சட்டம், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு, நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி போன்றவை பற்றி தலைமை ஆசிரியை விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னாள் மாணவர்களை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறப்பட்டது. மணர்க்கேணி செயலிக்கான தூதுவர்கள் அறிமுகம் பற்றி கூறப்பட்டது. பள்ளி ஆசிரியை ஜாய்சி நன்றி கூறினார்.