தமிழ் நாட்டின் புதிய மாநில கல்விக் கொள்கை வெளியீடு
( State New Education Policy 2025 published )
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி கல்விக்கொள்கை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-ல் தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.
மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1 ஆம் தேதி தமிழக முதல்வரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.
அதன் முழு விபரம் 👇👇👇












