பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்வு 21 ம் தேதி துவக்கம்
பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையவழி கலந்தாய்வு தொடர்பான விவரங்களுக்கு, www.tneaonline.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

மொத்தம் 1,86,475 இடங்களில், இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின.
மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அவர்களில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்தனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி முடிவடைகிறது.
தற்போது இடங்களுக்கான துணை கலந்தாய்வு 21-ஆம் தேதி தொடங்கும். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பிஇ, பி. டெக் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 18 ம் தேதி( நாளை மறுநாள் – திங்கள்கிழமை )வகுப்புகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












