பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.

கடந்த 28 ம் தேதி தொடங்கிய 10 ம் வகுப்பு பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்து.

இன்று சமூக அறிவியல் காலை 10.00 முதல் 12.30 மணிவரை தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிந்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்கின்றனர்.

மே 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கிறது.

மாநில முழுவதும் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர் இதற்காக மாநிலம் முழுவதும் 4113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 21 ம் தேதி திங்கள்கிழமை முதல் நடைபெற இருக்கிறது.