நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான மினிமாரத்தான் போட்டி :
மார்த்தாண்டம், நெல்லை கல்லூரி சாம்பியன்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டி 12-10-2025 அன்று கோவில்பட்டி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்க்கான மினிமாரத்தான் போட்டியில் முதலிடத்தை மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவக் கல்லூரி மாணவன் ஜெஃப்ரினும், இரண்டாம் இடத்தை கோவில்பட்டி எஸ். எஸ். துரையசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவன் துரைராஜ்ம் , மூன்றாம் இடத்தை திருநெல்வேலி சேவியர்ஸ் கல்லூரி மாணவன் பார்த்தசாரதியும் பெற்றனர்.

பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டியில் முதலிடத்தை திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவி முகில்வதனியும், இரன்டாம் இடத்தை தூத்துக்குடி A.P.C. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி சவரி பிரபாவும், மூன்றாம் இடத்தை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவி திவ்யா பாரதியும் பெற்றனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற் கல்வி இயக்குனர் முனைவர்.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் கே.ஆர். கல்வி நிறுவங்களின் தாளாளர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி, கேஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












