தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் போதை மருந்து எதிர்ப்பு குழு மற்றும் NSS அலகுகள் (70 மற்றும் 69) இணைந்து இன்று “மருந்து துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான சர்வதேச தினம்” குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.

நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு ஏற்பாட்டின்படி தொடங்கியது.

நிகழ்ச்சியில் இயற்பியல் துறை தலைவர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு போதை மருந்து எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் NSS (அலகு 70) திட்ட அதிகாரி டாக்டர். செல்வம் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளார்களாக தூத்துக்குடி போதைப் பொருள் புலனாய்வு மற்றும் குற்றப்பிரிவு ( NIBCID )உதவி ஆய்வாளர்கள் அனிதா வேணி, முருகன் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை மருந்து ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமான உரைகளை வழங்கினர்.

மேலும் அவர்கள், போதை மருந்துகள் வாழ்க்கையை எவ்வாறு நாசமாக்குகின்றன என்பதையும், அதை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் எதிர்கொள்ளலாம் என்பதையும் தெளிவாக விளக்கினார்கள்.

கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதி மொழி,220 மாணவ-மாணவியர்கள் மற்றும் பங்கேற்பாளர்களால் மேற்க்கொள்ளப்பட்டது.
Dr.கிருஷ்ணன், NSS திட்ட அதிகாரி (அலகு 69) நன்றி உரையாற்றினார்.