தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறையின் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் தூத்துக்குடி கீழ அழகாபுரியில் 13 செப்டம்பர் 2025 அன்று நெகிழி பயன்பாட்டை கைவிடுவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மாணவிகள் விழுப்புணர்வு பதாகைகள் ஏந்தி வீடுகள் தோறும் சென்று நெகிழி பயன்பாட்டினால் வரும் தீமைகளை எடுத்துரைத்தனர். வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர. மாலினி அப்சலா, பேராசிரியர்கள் முனைவர். வினோபா கிளாடிஸ் மற்றும் முனைவர். அனுஜா ஆகியோர் வழிநடத்தினர்.