தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச பை ( pi) தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச பை ( pi) தினம்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, கணிதத் துறை முதுநிலை மற்றும் ஆய்வுத் துறை சார்பில், சர்வதேச பை தினம் (International Pi Day) 2026 விழா புதன்கிழமை, 18 மார்ச் 2026 அன்று நடத்தப்பட்டது.

கணித நிலையான பை (π) என்பதின் முக்கியத்துவத்தை விளக்கும் பல்வேறு கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் பை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கினர்.

மேலும் Brain Bridge, Unlock the Theorem, EyeQ Test போன்ற சிந்தனை திறனை மேம்படுத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பை தினத்தை ஒட்டி பாடலும் பாடப்பட்டது.

இந்நிகழ்வுகள் மாணவர்களின் பகுத்தறிவு திறன், படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தின.பங்கேற்பாளர்களின் சிறந்த செயல்பாடுகளை பாராட்டும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நன்றி உரையுடன் நிறைவுற்றது.

இந்நிகழ்வில் கணிதத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பை தினம் ( pi Day) விளக்கம்:

சர்வதேச பை தினம் (Pi Day) ஆண்டுதோறும் மார்ச் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கணித மாறிலியான (பை) என்பதன் மதிப்பு
என்பதை மையமாக வைத்து, கணித ஆர்வலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2019 இல் யுனெஸ்கோ இதனை ‘சர்வதேச கணித தினமாகவும்’ அறிவித்தது.

1988 இல் லாரி ஷா (Larry Shaw) என்பவரால் சான் பிரான்சிஸ்கோ எக்ஸ்ப்ளோரேடோரியத்தில் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

இந்த நாள், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மாணவர்களிடையே கணித ஆர்வத்தைத் தூண்டவும் பயன்படுகிறது.