கடையநல்லூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது !

கடையநல்லூர் அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது !

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 2/9/2026 அன்று கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை கல்லூரி முதல்வர் முனைவர்.பீர்முகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்.அம்பிகாபதி, டாக்டர். சிவராம் கௌதம் மற்றும் ஆய்வக உதவியாளர் வேளாங்கண்ணி அவர்தம் குழுவினருடன் வந்திருந்து ரத்ததான முகாமிற்கு மருத்துவர்களுடன் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

ரத்ததான முகாமில் தகுதி வாய்ந்த மாணவ மாணவிகளிடமிருந்து 25 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட ரத்த வகைகள் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தானமாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குருதி வங்கி நிலைய மருத்துவ குழுவினர் பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவ குருதி கொடையாளர்களுக்கு பக்கபலகமாக இருந்தனர்.

இந்நிகழ்வினை முனைவர். ராஜேஷ் கண்ணா தொகுத்து வழங்கி அனைவருக்கும் இறுதியில் நன்றி கூறினார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் ரத்ததான முகாமை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.