12 ம் வகுப்பு பொதுத்தேர்வு : கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உட்பட இன்று 9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 18,755 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உட்பட இன்று 9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 18,755 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 முதல் தொடங்கி 26.03.2026 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 9 பாடங்களுக்கான தேர்விற்காக 18,976 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று 18,755 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் மாணவர்கள் 8,310 பேரும், மாணவிகள் 10,445 பேரும் உள்ளடங்குவர்.

 

 

இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 18,257 பேரும், தனித் தேர்வர்கள் 498 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இன்று 131 மாணவர்கள் மற்றும் 90 மாணவிகள் உள்பட 221 பேர் தேர்வினை எழுதவில்லை.

இன்று தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் மொத்தம் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்த 192 மாணவிகளில் 1 மாணவியைத் (வணிகவியல் தமிழ் வழி மாணவி ) தவிர 191 மாணவிகள் தேர்வினை எழுதினார்கள்.