கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு
புதிய ரெட் ரிப்பன் கிளப் ஆணை-(Red Ribbon Club) : அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்
இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாநில அளவிலான இரத்ததான நிகழ்வை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய ரெட் ரிப்பன் கிளப்பின் நல்வாய்ப்பாக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் அதிகாரி கரங்களால் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய ரெட் ரிப்பன் கிளப்பிற்கு உண்டான அறிவிப்பாணை வழங்கப்பட்டது. RRC (Red Ribbon Club).
கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் (Assistant Professor of Commerce) மற்றும் மாணவர் சரவணவேல்-III-B.Com(Gen) ஆணையை பெற்றுக் கொண்டனர்.
கல்லூரி தாளாளர் விஜயன், கல்லூரி முதல்வர் முனைவர்.அண்ணாமலைசாமி, இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.












