சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி தங்கம் வென்றார் : அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி தங்கம் வென்றார் : அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி அன்விதா, அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்தோனேசியாவில் மே 24ல் நடைபெற்ற சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சேலஞ்ச் – 2025 போட்டியில், 6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 500 மீட்டர் போட்டியில் ஐ.பி.என். அகடமி சார்பாக கலந்து கொண்ட தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியின் எல்கேஜி மாணவி அன்விதா சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

அவரது சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் மாதார் மற்றும் ஜீவா ஆகியோரின் முயற்சிக்கும், மாணவியின் வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஹோலி கிராஸ் பள்ளிக்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தொிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வைத்து மாணவி அன்விதா சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நோில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அமைச்சர் வாக்குறுதி :

அப்போது அமைச்சர் வெற்றி பெற்ற மாணவி அன்விதா – விடம் விளையாட்டு துறையில் பல சாதனைகளை புாிய வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் எதுவாக இருந்தாலும் தான் செய்து கொடுப்பதாக கூறினாா்.