கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அகில இந்திய பல்கலைக்கழக ஹாக்கி போட்டிக்குத் தகுதி
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி 14-01-2026 முதல் 19-01-2026 வரை சென்னை சத்திய பாமா பல்கலைக்கழகதில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி 22-01-2026 முதல் 28-01-2026 வரை ஒரிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கே.ஆர்.கல்லூரி மாணவர்கள் அரவிந்த், சீனிவாசன், மணிசங்கர், கலாநிதி மற்றும் எழிலரசன் ஆகிய மாணவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்
பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், பயிர்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.












