தூத்துக்குடி ஷாரா கலை வளர் மன்றத்தின்
கோடைகால கலைப்பயிற்சி முகாம் 2025

நமது தூத்துக்குடி மாவட்டத்தில் ஷாரா கலை வளர் மன்றம் 17 வருடங்களாக சிறந்த முறையில் மாணவர்களுக்கு ஓவியம், குரலிசை,பரதநாட்டியம்,யோகா,கராத்தே, சிலம்பம்,ஸ்கேட்டிங்,வில்வத்தை, சதுரங்கம், கைவினைகள், கணினி மேலும் பல கலைகள் மற்றும் விளையாட்டு துறையில் இம்மன்றம் மூலமாக அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம்.
2025 – 2026 கல்வி ஆண்டிற்கான கோடைகால கலைப் பயிற்சி முகாமில் மேலே கொடுக்கப்பட்டுள்ள கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமின் முக்கிய நோக்கம் :
தற்கால சூழ்நிலையில் மாணவர்கள் கைபேசியில் அதிக நேரத்தை செலவிட்டு, உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு, 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பொழுதுபோக்கு விளையாட்டுகளான, எரிபந்து, கிட்டி கம்பு, கண்ணாமூச்சி, கோலிகுண்டு, மாதங்களின் பெயர்கள் கூறி விளையாடுவது, நினைவாற்றலை கூறும் வகையில் காதுகளில் வார்த்தைகள் கூறி விளையாடுவது என பல விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் இதனை தங்களது வீடுகளிலும் விளையாட ஆரம்பித்ததால் கைபேசியில் விளையாடுவதிலிருந்து விடுபட்டனர்.
சுடுமண் சுதை சிற்பம்:
செயற்கை களிமண்ணில் விளையாடிய மாணவர்கள், நமது பாரம்பரியமான களிமண்ணில் ஆக்கப்பூர்வமான பொருட்களை தயாரித்து,பயிற்சி பெற்றனர். இதில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பராமரிக்க, பென் ஸ்டாண்ட், டீ கப், பெண்களுக்கு தேவையான அணிகலன்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்கள் செய்வதற்கும் கற்றுக் கொண்டனர்.
விளையாட்டுத்துறை:
இம்மன்றம் மூலமாக விளையாட்டுத்துறையில், ஸ்கேட்டிங் பிரிவில் தேசிய அளவிலான Inline freestyle போட்டியில் சந்தோஷ் ராஜா மாணவன் வெற்றி பெற்று SDAT இரண்டு லட்சம் பெறுவதற்கு தகுதி அடைந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதுபோல் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் 19 வயதிற்கு மேல் பிரிவில் முகமது பிலால் மற்றும் முகேஷ் அவர்கள் தேசிய போட்டிற்கு தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு துறையின் பயன்கள் 12 ம் வகுப்பில் மதிப்பெண்களில் பின் தங்கிய மாணவர்கள் விளையாட்டுத் துறை, ஒதுக்கீட்டின் மூலமாக NEET, JEE, IIT, BE ஆகிய நுழைவு தேர்வில் அடிப்படை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விளையாட்டு துறை மூலமாக உயர் கல்வி பெறலாம்.
கல்லூரி மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசின் மூலமாக அரசு வேலை பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும்.
இப்பயிற்சி முகாமில் ஷாரா கலைப்பள்ளியின் இயக்குனர் ஷாநவாஸ், முதல்வர் ஷாரா முபாரக், பயிற்சியாளர்கள் ஷேக் தாவூத், முகமது பிலால், முகேஷ், பாலகிருஷ்ணன், வேலு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.












