தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரியில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் குருளையர், நீலப்பறவையினர்களின் சிந்தனைநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரியில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின்
குருளையர், நீலப்பறவையினர்களின் சிந்தனைநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் குருளையர், நீலப்பறவையினர்களுக்கான சிந்தனைநாள் விழா கொண்டாட்டம் தூத்துக்குடி மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் வைத்து ஒருநாள் சிறப்பு முகாமாக நடைபெற்றது.

பாரத சாரண. சாரணிய இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜான்சன் பால் சிந்தனை நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரையும்; வரவேற்று, இளம் வயது முதலே நாள்தோறும் தன்னால் முடிந்த நற்செயலை பிறருக்கு செய்ய பழக வேண்டும். பரிசு, வெகுமதி, பிரதிபலன் எதிர்பார்க்காமால் பிறருக்கு மனமகிழ்ச்சியுடன் செய்யும் செயலே நற்செயலாகும்.

சாரண இயக்கத்தின்; பாடத்திட்டங்களை முறையாக கற்றுக் கொள்வதன் மூலம் சிறந்த மாணவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள முடியும் என குருளையர், நீலப்பறவையினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குருளையர், நீலப்பறவையினர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களை வாழ்த்தி பேசினார்.

மாணவ, மாணவியர்கள் மரியாதையுடனும், பொறுப்புடனும் பெற்றோர்களுக்கு கீழ்படிதலுள்ளவர்களாகவும், ஏழை மக்களுக்கு உதவி செய்பவர்களாகவும், பள்ளி பாடங்களோடு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு தான் பின்பற்றுவதோடு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வீட்டிலும், சமுதாயத்திலும் ஒழுக்கமுள்ளவர்களாக வாழவும், மதிப்பெண்கள் அதிகம் பெற்று மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும,; ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

குருளையர், நீலப்பறவையினர்களுக்கான முகாமில் தூத்துக்குடி பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் 338 குருளையர், நீலப்பறவையினர்கள், 20 பொறுப்பாசிரியர்கள்; கலந்து கொண்டனர். பயிற்சியாளர்களாக பிரியங்கா, உதயம்மாள், மணிமேகலை,உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். சாரண இயக்கத்தின் மாவட்ட ஆணையர் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.