பள்ளிகள் திறக்கும் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
ஏற்கனவே அறிவித்தபடி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும். இதுவரை அந்த முடிவில்தான் இருக்கிறோம்.
முதல்வர் அலுவலகத்தில் இதற்காக தனித்துறையே இருக்கிறது. அவர்கள் பள்ளி திறப்பு நேரத்தின்போது வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு, அறிவுறுத்துவார்கள். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று கூறினார்.
வெயிலின் தாக்கம் குறையும்
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதால், வெயிலின் தாக்கம் ஜூன் மாத தொடக்கத்தில் குறைவாக இருக்கும் . எனவே இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு கோடை வெயிலை பொறுத்து இந்த மாத இறுதியில் முடிவெடுக்கும் என தெரிகிறது.












