நெல்லை லிட்டில் ஃப்ளவர் மாடல் பள்ளியில் பட்டமளிப்பு விழா – 2025-26

நெல்லை லிட்டில் ஃப்ளவர் மாடல் பள்ளியில் பட்டமளிப்பு விழா – 2025-26

திருநெல்வேலி டவுண் கோடீஸ்வரன் நகரின் எதிரே அமைந்துள்ள லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் U.K.G. மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் மரியசூசை, தலைமை தாங்கினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர். வெளியப்பன்  இயக்குனர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள்,  கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் துவங்கி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறமைகள் அனைவரையும் கவர்ந்தன.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்கள் அடுத்த கட்டக் கல்விக்கான பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பள்ளியின் முதல்வர் ரெனால்டு நன்றி கூறினார்.விழா நிறைவு பெற்ற பின் அனைவருக்கும் இரவு உணவு பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு பெற்றது.