கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி மாணவர்கள் தமிழக ஹாக்கி அணியில் விளையாட தகுதி

24.03.2025 மற்றும் 25-03-2025 ஆகிய இரு தினங்களில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் மாநில ஆண்களுக்கான ஹாக்கி அணிக்கான  தேர்வு நடைபெற்றது.

இதில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திவாகர் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.  வரும்   09-04-2025 முதல் 15-04-2025 வரை உத்திரபிரதேச மாநிலம் ராஞ்சியில்    நடைபெற உள்ள, சீனியர் நேஷனல் ஆண்கள் ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களை, கல்லூரியின் நிர்வாகத்தினர்,  முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.