யுபிஎஸ்சி (UPSC ) குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியாகின. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு
அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது.
முதன்மை தேர்வு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக தேர்வர்கள் மறுபடியும் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25ஆம் தேதிக்குள் தேர்வாணைய வலைதளத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு 011 – 23385271
011 – 23381125
011 – 23098543
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












