கோவில்பட்டிகே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் துறையின்சார்பாக மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதில் இத்துறையின் மேனாள் மாணவரும், கோயம்புத்தூர், RVS கலை மற்றும் அறிவியில் கல்லூரியின் உயிர்வேதியியல் துறையின் இணை பேராசிரியருமான முனைவர். சிவகணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவர் மாணவர்களுக்கு“உயிர் வேதியியல் துறையின் நோயறிதல் பிரிவில் உள்ள புதிய தொழில் நுட்பங்களும் மற்றும் அதன் பயன் பாடுகளும்”என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

இந்த பயிற்சிப் பட்டறையில், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்கள், இரத்தத்தட்டுகள், லிப்பிடுபிரோபைல், இரத்தஅழுத்தம், இரத்த சர்க்கரையின் அளவு,யூரியா,உடல் குறியீட்டு எண் போன்றவைகளை எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பதை பற்றி மாணவ -மாணவியர்கள்“ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள்”வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சி பட்டறையில் பிற கல்லுரிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.
இப்பயிற்சி பட்டறைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லுரி நிர்வாகத்தினர் வழிகாட்டுதலின்படி முதல்வர்,பேராசிரியர்கள், மற்றும்மாணவ,மாணவியர்கள் செய்திருந்தனர்.












