NEET – PG : முதுநிலை நீட் தேர்வில் 2.66 லட்சம் பேர் பங்கேற்பு: செப்.30-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு ‌!

NEET – PG
முதுநிலை நீட் தேர்வில் 2.66 லட்சம் பேர் பங்கேற்பு: செப்.30-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு ‌!

முது​நிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் 1,111 மையங்​களில் நடை​பெற்​றது. எம்​பிபிஎஸ் முடித்த 2.66 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தேர்வு முடிவு​கள் செப்​.30-ம் தேதி வெளி​யாகின்​றன.

நாடு முழு​வதும் உள்ள அரசு, தனி​யார் மருத்​து​வக் கல்​லூரிகள், நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​கள், மத்​திய அரசின் கல்வி நிறு​வனங்​களில் மருத்​து​வப்பட்ட மேற்​படிப்​பு​களான எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளமோ படிப்​பு​களுக்​கான இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறுப​வர்களைக் கொண்டு நிரப்​பப்​படு​கிறது. இந்த நீட் தேர்வை ஆண்​டு​தோறும் தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் (என்​பிஇஎம்​எஸ்) நடத்​துகிறது.

அதன்​படி, எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளமோ படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான நீட் தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழு​வதும் இருந்து எம்​பிபிஎஸ் முடித்த மருத்​து​வர்​கள் 2.73 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், திருச்​சி, மதுரை, கோவை என 24 இடங்​கள் உள்பட நாடு முழு​வதும் 339 நகரங்​களில் உள்ள 1,111 தேர்வு மையங்​களில் முது​நிலை நீட் தேர்வு நேற்று 30 – 08 – 2026 ஞாயிறு காலை 9 மணி முதல் மதி​யம் 12.30 மணி வரை நடை​பெற்​றது.

முறை​கேடு​களைத் தடுக்க தீவிர கண்​காணிப்​பு, பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. தேர்​வில் 2,65,980 பேர் பங்​கேற்​றனர்.

நீட் மறுதேர்வு :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் 2 தேர்வு மையங்களில் மின் வினியோகத் தடை காரணமாக, 2,445 பேர் தேர்வு எழுதுவதில் குளறுபடி ஏற்பட்டது. அதனால், மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்களின் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த 2 மையங்களைச் சேர்ந்த தேர்வர்கள் 2,445 பேருக்கு செப்.5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை செப்.30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு :

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களிலும் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎஸ்) மருதுவக் கலந்தாய்க் குழு நடத்துகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருதுவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருதுவக் கல்லூரியின் மாநில அரசுக் கான இடங்கள் மற்றம் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக் கான கலந்தாய்வை தமிழ் நாடு மருத்துவ ஆராய்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.