10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு :
ஜீன் 25 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஜீன் 25 முதல் 10 ம் வகுப்பு & 11 ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நடப்பாண்டில், 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு துணைத் தேர்வெழுத, விண்ணப்பித்தத் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 25.06.2025 (புதன் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளம் :
தனித்தேர்வர்கள். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘Click’செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தர பதிவு (Permanent Register No.) பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11 ம் வகுப்பு செய்முறைத் தேர்வு :
11 ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
அனுமதி :
உரிய ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
10 ம் வகுப்பு செய்முறைத் தேர்வு :
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 26.06.2025 (வியாழக்கிழமை) முதல் 28.06.2025 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது.
மேலும், இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அட்டவணை :
ஜூலை 2025, 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது












