தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” விரிவாக்கம் தொடக்க விழா: அமைச்சர் அனிதா R. ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார்
நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தமிழகமெங்கும் துவங்கப்பட்டது. இத் திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
அதன் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள சி சண்முக சுந்தரம் நாடார் தொடக்கப் பள்ளியில் மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா R. ராதா கிருஷ்ணன் இத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இ. ஆ.ப. கலந்து கொண்டு மாணவர்களுடன் காலை உணவருந்தி மகிழ்ந்தனர்.












