தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஜின் ஃபேக்டரி ரோடு பள்ளியில் முப்பெரும் விழா : அமைச்சர் ஸ்ரீ நாத் கலந்து கொண்டார் !

தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஜின் ஃபேக்டரி ரோடு பள்ளியில் முப்பெரும் விழா :
அமைச்சர் ஸ்ரீ நாத் கலந்து கொண்டார் !

தூத்துக்குடி  மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஜின் ஃபேக்டரி ரோடு பள்ளியில் இன்று 22.08.2026 காலை 9.30 மணி அளவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், மாண்புமிகு மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பள்ளியின் 200-வது மாணவர் சேர்க்கை விழா, சுதந்திர தின கலைநிகழ்ச்சி பரிசளிப்பு விழா மற்றும் மாணவர் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது.

பள்ளி வளாகத்திற்கு வருகை தந்த அமைச்சரை பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தலைமைப் பண்பு மற்றும் எதிர்கால கனவுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, I.A.S., முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன், வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட கல்வி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

“இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழா, மாணவர்களின் திறமை, தலைமைத்துவம் மற்றும் கல்வி வளர்ச்சியைப் போற்றும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.